தீபிகா படுகோனே அடல்ட் ஒன்லி படம்: பிப்ரவரி 11ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது

தினமலர்  தினமலர்
தீபிகா படுகோனே அடல்ட் ஒன்லி படம்: பிப்ரவரி 11ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது

தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகி உள்ள அடல்ட் கண்டன்ட் படம் ‛ஜெகரியான்'. இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காது என்பதால், தணிக்கை சான்று தேவைப்படாத ஓடிடி தளத்தில் வெளியிட ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவலும் அதிகரித்து வருவதால் ஓடிடி தளத்தில் வெளியாவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வருகிற பிப்ரவரி மாதம் 11ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பெரிய தொகை கொடுத்து அமேசான் நிறுவனம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் தீபிகாவுடன் சித்தார்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே, தாரிகா கர்வா, நசுருதீன் ஷா, ரஜத் கபூர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். குஷன் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், கபீர் காத்பாலியா, சவேரா மேத்தா இசை அமைத்துள்ளனர். ஷாகுன் பத்ரா இயக்கி உள்ளார்.

மூலக்கதை