அடுத்த மது விருந்து சர்ச்சை மீண்டும் சிக்கினார் போரிஸ்

தினமலர்  தினமலர்

லண்டன்: பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்குக்கு சில மணி நேரங்கள் முன்னதாக, பிரதமர் போரிஸ் ஜான்சனின் அலுவலக நிர்வாகிகள் மது விருந்து நடத்தியது குறித்த செய்தி அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் 2020ல் கொரோனா முதல் அலையின் போது கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. வீட்டை விட்டு மக்கள் வெளியே வர கூட அனுமதிக்கப்படவில்லை. உடல் நலம் பாதிக்கப்பட்ட உறவினர்கள், நண்பர்களை சந்திப்பது, இறுதி சடங்குகளில் பங்கேற்பது உள்ளிட்டவை கூட முடியாத காரியமாக இருந்தது. இதனால் மக்கள் கடும் மன உளைச்சலை எதிர்கொள்ள நேர்ந்தது.இந்நிலையில் 2020 மே மாதம், லண்டனின் 10, டவுனிங் தெருவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் மிகப் பெரிய மது விருந்தை போரிஸ் ஜான்சன் நடத்தியதும் அதில் 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்றதும் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.

இது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. போரிஸ் ஜான்சனின் பொறுப்பற்ற செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து தன் தவறுக்கு போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரினார்.இந்த பிரச்னையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் மற்றொரு சர்ச்சை தற்போது வெடித்துள்ளது.

பிரிட்டன் ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் வயோதிகம் காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரலில் காலமானார். அவரது இறுதி சடங்கு நடப்பதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக, போரிஸ் ஜான்சன் அலுவலக நிர்வாகிகள் மிகப் பெரிய மது விருந்து நடத்தி கும்மாளம் அடித்ததாக, பிரிட்டன் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

லண்டன்: பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்குக்கு சில மணி நேரங்கள் முன்னதாக, பிரதமர் போரிஸ் ஜான்சனின் அலுவலக நிர்வாகிகள் மது விருந்து நடத்தியது குறித்த செய்தி அந்நாட்டு

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை