ஒரே ஓடுதளத்தில் 2 விமானங்கள்: கடைசி நேரத்தில் விபத்து தவிர்ப்பு

தினமலர்  தினமலர்
ஒரே ஓடுதளத்தில் 2 விமானங்கள்: கடைசி நேரத்தில் விபத்து தவிர்ப்பு

துபாய்: துபாய் விமான நிலையத்தில் இரண்டு பயணியர் விமானம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள் ஆக இருந்த சம்பவம் கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது.

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, நம் நாட்டின் தெலுங்கானாவின் ஹைதராபாத் நோக்கி, 'எமிரேட்ஸ் இகே - 524' ரக பயணியர் விமானம் கடந்த 9ம் தேதி இரவு புறப்படத் தயாரானது. அதே நேரத்தில் துபாய் - பெங்களூரு இடையிலான 'எமிரேட்ஸ் இகே - 568' ரக விமானமும் புறப்பட தயாரானது. இந்த இரண்டு விமானங்களும் 5 நிமிட இடைவெளியில் புறப்படுவது வழக்கம்.

துபாய் - ஹைதராபாத் விமானம் புறப்படுவதற்காக ஓடுதளத்தில் அதிவேகமாக வந்த போது, எதிரில் துபாய் - பெங்களூரு விமானம் புறப்பட தயாராகி வந்து கொண்டிருந்தது. உடனடியாக சுதாரித்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் துபாய் - ஹைதராபாத் விமானத்தின் புறப்பாடை நிறுத்தும்படி உத்தரவிட்டனர்.

இதையடுத்து அந்த விமானம் ஓடுதளத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேறி மற்றொரு விமானத்துக்கு வழிவிட்டது. அந்த ஓடுதளத்தில் இருந்து துபாய் - பெங்களூரு விமானம் புறப்பட்டுச் சென்றது. கடைசி நேர எச்சரிக்கையால் மிகப் பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹைதராபாத் புறப்பட இருந்த விமானம் ஒப்புதல் கிடைக்கும் முன்னரே புறப்பட தயாரானது குழப்பத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

துபாய்: துபாய் விமான நிலையத்தில் இரண்டு பயணியர் விமானம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள் ஆக இருந்த சம்பவம் கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது.வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை