லிஜோமோள் நடிப்பை பார்த்து கண்ணீர் சிந்தினேன்: ஹலிதா ஷமீம்

தினமலர்  தினமலர்
லிஜோமோள் நடிப்பை பார்த்து கண்ணீர் சிந்தினேன்: ஹலிதா ஷமீம்

சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெய் பீம் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய லிஜோமோள் ஜோஸ் தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகி உள்ள புத்தம்புது காலை விடியாதா என்ற அந்தாலஜி படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் ஹலீதா ஷமீம் இயக்கி உள்ள லோனர்ஸ் என்ற கதையில் நல்லா என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

இதுகுறித்து ஹலீதா ஷமீம் கூறியிருப்பதாவது: சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடிகை லிஜோமோள் ஜோஸின் நடிப்பு எனக்கு பிடித்திருந்தது. அப்படத்தின் இயக்குநர் சசி, 'ஜெய் பீம்' பட இயக்குநர் ஞானவேல், நடிகர் மணிகண்டன் ஆகிய மூவரும் லிஜோமோள் ஜோஸின் நடிப்பை வெகுவாக பாராட்டினர்.

இதனைத் தொடர்ந்து 'நல்லா' என்ற கதாபாத்திரத்திற்காக நான் அவரை அணுகியபோது, அவர் திரைக்கதையை முழுவதுமாக வாசித்துவிட்டு, சில காட்சிகளை இப்படி செய்யலாமா? என செல்போனில் பதிவு செய்து வீடியோ ஒன்றை எனக்கு அனுப்பி வைத்தார். அதை பார்க்கும்போது எனக்கு கண்ணீர் வர ஆரம்பித்தது. அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பைப் பார்த்து நான் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டேன்.

ஜெய் பீம் படத்தை பார்த்த பிறகு அவருடைய கடின உழைப்பு மற்றும் முயற்சிக்காக அவரைப்பற்றி பெருமிதம் அடைந்தேன். ஜெய் பீம் படத்தில் செங்கேணி என்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்த லிஜோமோள் ஜோஸ், 'புத்தம் புது காலை விடியாதா'வில் 'நல்லா' என்ற பக்கத்து வீட்டு பெண்ணாக மாறி, அற்புதமாக நடித்துள்ளார். அவரின் இந்த மாற்றத்தை திரையில் காணும் பொழுது சுவாரஸ்யமாக இருக்கும். என்றார்.

மூலக்கதை