அந்தேரியில் சம்பவம் ஆட்டோவில் சென்றவர் கார் மோதி பரிதாப பலி

தினகரன்  தினகரன்
அந்தேரியில் சம்பவம் ஆட்டோவில் சென்றவர் கார் மோதி பரிதாப பலி

அந்தேரி: சம்பவத்தன்று ஜெயிஸ் என்ற நபர் இந்திரஜத் என்ற நபரில் ஆட்டோவில் பயணம் செய்து  கொண்டிருந்தார்.  அந்தேரி எஸ்.வி.சாலை, ஜெயின் கோயில் அருகே உள்ள சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது, அதே வழியாக வந்த கார் ஒன்று இந்திரஜித் ஆட்டோ மீது மோதியது. மோதிய வேகத்தில் ஆட்டோவில்  இருந்த ஓட்டுனர் உட்பட இரண்டு பேரும் சாலையில் விழுந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இரண்டு பேரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலே ஜெயிஸ் உயிரிழந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிவைர் ராஜு கோவில்கரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

மூலக்கதை