துபாய் விமான நிலையத்தில் இரு விமானங்களுக்கும் ஒரே ஓடுபாதை; தவறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் ஆபத்து தவிர்ப்பு

தினகரன்  தினகரன்
துபாய் விமான நிலையத்தில் இரு விமானங்களுக்கும் ஒரே ஓடுபாதை; தவறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் ஆபத்து தவிர்ப்பு

துபாய்: துபாய் சர்வேத விமானநிலையத்தில் இந்தியா புறப்பட இருந்த இரு விமானங்களும் ஒரே ஓடு பாதையில் மோதுவது போல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. துபாய் விமனநிலையத்திலிருந்து கடந்த ஞாயிற்றுகிழமை இரவு 2 விமானங்கள் ஹைத்ராபாத் மற்றும் பெங்களூரு- விற்கு புறப்பட தயாராக இருந்துள்ளன. 5 நிமிட இடைவெளியில் புறப்படவிருந்த இரண்டு விமானங்களுக்கும் ஒரே ஓடுபாதை ஒதுக்கப்பட்டது. புறப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன்பு ஒரே ஓடுபாதையில் 2 விமானங்களும் செல்ல இருந்ததை விமானநிலைய அதிகாரிகள் கண்டுபிடித்து ஹைத்ராபாத் விமானத்தை நிறுத்துமாறு விமான ஓட்டிக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து பெங்களூரு செல்லும் எமிரேட்ஸ் விமானம் முதலில் புறப்பட்டுச் சென்றது. உரிய நேரத்தில் தவறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கையின் நகலை அளிக்குமாறு துபாய் விமான போக்குவரத்து அமைச்சகத்தை இந்திய விமான கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.          

மூலக்கதை