சபரிமலை ஐயப்பன் கோயிலில் சரண கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் மகர ஜோதி தரிசனம் செய்த பக்தர்கள்

தினகரன்  தினகரன்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் சரண கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் மகர ஜோதி தரிசனம் செய்த பக்தர்கள்

திருவனந்தபுரம்: சபரிமலை பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் காட்சியளியத்த ஐயப்பனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் தை முதல்நாளில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான மகரஜோதி நிகழ்ச்சி சபரிமலையில் நேற்று விமர்சியாக நடைபெற்றது. ஸ்வாமி ஐயப்பனுக்கு பந்தளராஜா அரண்மனை ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன. அதை தொடர்ந்து சிறப்பு பூஜையினை தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. இதனையடுத்து சரியாக நேற்று மாலை 6.50 மணிக்கு பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சியளித்தார். ஜோதியை கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் \'ஸ்வாமியே சரணம் ஐயப்பா\' என்று சரண கோஷமிட்டு தரிசித்தனர்.      

மூலக்கதை