விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்யன்!

தினமலர்  தினமலர்
விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்யன்!

விஜய் டிவி நடிகரான ஆர்யனும், ஜீ தமிழ் நடிகையான ஷபானாவும் காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். ஷபானா இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவருடைய திருமணத்தை இருவீட்டார் தரப்பிலும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களது திருமணம் நண்பர் சூழ சிறப்பாக நடைபெற்றது.

ஷபானா திருமணமான சில நாட்களிலேயே சோகமான பதிவை ஒன்றை வெளியிட்டார். இது குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏன் என்ற கேள்வி எழுந்த நிலையில், ஆர்யன் வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றும், வேறு திருமணம் செய்து வைக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியது. எனவே, ஷபானா - ஆர்யன் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும் தகவல் வெளியாகியது.

இந்நிலையில், முதல்முறையாக சமூக வலைதளத்தில் போஸ்ட் போட்டுள்ளார். ஸ்டோரியில் ஷபானாவுடன் நிற்கும் ஆர்யன், மகிழ்ச்சியான இரண்டாவது மாதம் என அதில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இரண்டு மாதங்களாக வலம் வந்த விவாகரத்து சர்ச்சைக்கு ஆர்யன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மூலக்கதை