'மாஜி' அமைச்சர்கள் இருவர் சமாஜ்வாதியில் இணைந்தனர்

தினமலர்  தினமலர்
மாஜி அமைச்சர்கள் இருவர் சமாஜ்வாதியில் இணைந்தனர்

லக்னோ-உத்தர பிரதேசத்தில் பா.ஜ.,வில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர்கள் சுவாமி பிரசாத் மவுரியா, தரம் சிங் சைனி உட்பட ஏழு எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அப்னா தளத்தை சேர்ந்த எம்.எல்.ஏ., சவுத்ரி அமர் சிங் ஆகியோர் சமாஜ்வாதி கட்சியில் நேற்று இணைந்தனர்.

உ.பி., மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10ல் துவங்கி ஏழு கட்டங்களாக நடக்கிறது. தேர்தலுக்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் பதவி வகித்து வந்த சுவாமி பிரசாத் மவுரியா, தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன் பா.ஜ.,வில் இருந்தும் சமீபத்தில் விலகினார்.இவரை தொடர்ந்து பா.ஜ.,வை சேர்ந்த தரம் சிங் சைனியும் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன், கட்சியில் இருந்தும் விலகினார்.


சுவாமி பிரசாத் மவுரியாவின் விலகலைத் தொடர்ந்து, இரண்டு அமைச்சர்கள் உட்பட 10 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் இருந்து வெளியேறினர்.இந்நிலையில் சுவாமி பிரசாத் மவுரியா, தரம் சிங் சைனி, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் ரோஷன்லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாபதி, முகேஷ் வர்மா, வினய் ஷாக்கியா, பகவதி சாகர் ஆகியோர் சமாஜ்வாதியில் நேற்று இணைந்தனர். அப்னா தள எம்.எல்.ஏ., சவுத்ரி அமர் சிங்கும் சமாஜ்வாதியில் நேற்று இணைந்தார்.

லக்னோ-உத்தர பிரதேசத்தில் பா.ஜ.,வில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர்கள் சுவாமி பிரசாத் மவுரியா, தரம் சிங் சைனி உட்பட ஏழு எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அப்னா தளத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.,

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை