ஆக்சிஜன் கையிருப்பு : சுகாதார துறை உத்தரவு

தினமலர்  தினமலர்
ஆக்சிஜன் கையிருப்பு : சுகாதார துறை உத்தரவு

'கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், உள்நோயாளிகள் பிரிவில், 48 மணி நேரத்துக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்' என, சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான வழிகாட்டுதல் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அனைத்து மருத்துவமனைகளும் தற்போதுள்ள கைவசம் உள்ள ஆக்சிஜன் சிகிச்சை மற்றும் சேவைகளை உடனே மதிப்பிட வேண்டும். உள்கட்டமைப்பை ஆராய்ந்து, திரவ மருத்துவ ஆக்சிஜன் நிரப்பும் வசதி, வினியோகம் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

'கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், 48 மணி நேரத்துக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். ஆக்சிஜன் சிலிண்டர், அதை மீண்டும் நிரப்புவதற்கான அமைப்பு குறித்து ஆராய வேண்டும். வென்டிலேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இரண்டாம் அலையின் போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு, கடைசி நேரத்தில் ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது. தற்போது, தொற்று வேகமாக பரவி வந்தாலும், ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன' என்றனர்.

'கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், உள்நோயாளிகள் பிரிவில், 48 மணி நேரத்துக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்' என, சுகாதாரத் துறை

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை