அயர்லாந்திடம் வீழ்ந்தது விண்டீஸ் | ஜனவரி 14, 2022

தினமலர்  தினமலர்
அயர்லாந்திடம் வீழ்ந்தது விண்டீஸ் | ஜனவரி 14, 2022

கிங்ஸ்டன்: விண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விண்டீஸ் சென்ற அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற விண்டீஸ் அணி 1–0 என தொடரில் முன்னிலையில் இருந்தது. அயர்லாந்து அணி கேப்டன் பால்பிர்ன், விக்கெட் கீப்பர் டக்கர் என சிலருக்கு கொரோனா ஏற்பட, இரண்டாவது போட்டி சில நாள் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் இரண்டாவது போட்டி கிங்ஸ்டனில் நடந்தது. முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில் ‘டாஸ்’ வென்ற அயர்லாந்து அணி தற்காலிக கேப்டன் ஸ்டெர்லிங் பீல்டிங் தேர்வு செய்தார்.

விண்டீஸ் அணிக்கு ஷாய் ேஹாப் (17), புரூக்ஸ் (43) கைகொடுத்த போதும் 111/7 என திணறியது. ரொமாரியோ 50, பின் வரிசையில் ஸ்மித் 46 ரன் எடுக்க விண்டீஸ் அணி 48 ஓவரில் 229 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 

ஸ்டெர்லிங் ‘5000’

அயர்லாந்து அணியின் போர்டர்பீல்டு 26 ரன் எடுத்தார். ஸ்டெர்லிங் 18 ரன் எடுத்த போது, அயர்லாந்து அணிக்காக ஒருநாள் அரங்கில் 5000 ரன் எடுத்த முதல் வீரர் (மொத்தம் 135 போட்டி, 5003 ரன்) ஆனார். இவர் 21 ரன்னில் கிளம்பினார். 31 ஓவரில் 157/4 என இருந்த போது மழை குறுக்கிட்டது. மாற்றப்பட்ட இலக்கைத் துரத்திய அயர்லாந்து அணிக்கு டெக்டர் (54) கைகொடுக்க, 32.3 ஓவரில் 168 ரன் எடுத்து, ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி 5 விக்கெட்டில் வெற்றி பெற்றது. ஒருநாள் தொடர் 1–1 என சமனில் உள்ளது.

மூலக்கதை