டெஸ்ட் தொடரை இழந்தது இந்தியா: கேப்டவுன் டெஸ்டில் தோல்வி | ஜனவரி 14, 2022

தினமலர்  தினமலர்
டெஸ்ட் தொடரை இழந்தது இந்தியா: கேப்டவுன் டெஸ்டில் தோல்வி | ஜனவரி 14, 2022

கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் ஏமாற்றிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனையடுத்து தொடரை 1–2 என்ற கணக்கில் இழந்தது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1–1 என, சமநிலையில் இருந்தது. மூன்றாவது டெஸ்ட் கேப்டவுனில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 223, தென் ஆப்ரிக்கா 210 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 198 ரன்னுக்கு சுருண்டது. பின், 212 ரன் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி, மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 101 ரன் எடுத்திருந்தது.

 

நான்காம் நாள் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய கீகன் பீட்டர்சன் 82 விளாசினார். பின் இணைந்த வான் டெர் துசென், டெம்பா பவுமா ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 3 விக்கெட்டுக்கு 212 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்க அணி 2–1 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.

மூலக்கதை