விருமன் பர்ஸ்ட் லுக் வெளியீடு

தினமலர்  தினமலர்
விருமன் பர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‛விருமன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார், செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் தேன்மொழி என்னும் கதாபாத்திரத்தில் தைரியம் மிகுந்த பாசக்கார மதுரைப் பெண்ணாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இப்படத்தை சூர்யா - ஜோதிகா இணைந்து 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இப்படத்தை ஏப்ரலில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மூலக்கதை