இந்தியா மீது பொருளாதார தடையா? ஜோ பைடனின் பிரதிநிதி விளக்கம்!

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்:''ரஷ்யாவிடம் இருந்து எஸ் - 400 ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குவதை நாம் விரும்பவில்லை. அதே நேரத்தில் இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை,'' என, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பிரதிநிதி ஜேம்ஸ் ஓபிரையன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.இதையடுத்து ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் வாங்கும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கும் வகையில் 'காட்சா' என்ற கடுமையான சட்டத்தை 2017ல் அமெரிக்கா அறிமுகம் செய்தது.இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து எஸ் - 400 ரக ஏவுகணைகள் வாங்க 2017ல் இந்தியா ஒப்பந்தம் செய்தது.

தற்போது அந்த ஏவுகணைகளை இந்தியாவுக்கு ரஷ்யா ஒப்படைக்க உள்ளது.அதனால் நட்பு நாடான இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்குமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக அமெரிக்க எம்.பி.,க்களிடையே பொருளாதார தடை கொள்கைக்கான அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பிரதிநிதியான ஜேம்ஸ் ஓபிரையன் விளக்கம் அளித்தார். அப்போது எம்.பி.,க் களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
ரஷ்யாவிடம் இருந்து எஸ் - 400 ரக ஏவுகணைகள் வாங்கியதாக துருக்கி மீது நாம் பொருளாதார தடை விதித்தோம். அதே நேரத்தில் நம் நட்பு நாடான இந்தியா மீதும் தடை விதிக்கப்படுமா என்பது குறித்து எம்.பி.,க்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்கொள்ள இந்தியா வலுவாக இருப்பது முக்கியம். சீனா, பாகிஸ்தானுடன் எல்லை பிரச்னைகளை இந்தியா சந்தித்து வருகிறது. தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக இந்த ஏவுகணைகளை இந்தியா வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா நீண்ட காலமாக ரஷ்யாவிடம் இருந்தே ஆயுதங்களை வாங்கி வருகிறது.
இருப்பினும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஏவுகணைகள் வாங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை. பல விஷயங்களை ஆராய்ந்தே இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வாஷிங்டன்:''ரஷ்யாவிடம் இருந்து எஸ் - 400 ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குவதை நாம் விரும்பவில்லை. அதே நேரத்தில் இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து முடிவு ஏதும்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை