தமாகா மாணவர் அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்: ஜி.கே.வாசன் வாழ்த்து

தினகரன்  தினகரன்
தமாகா மாணவர் அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்: ஜி.கே.வாசன் வாழ்த்து

சென்னை: தமாகா மாணவர் அணி நிர்வாகிகள் பட்டியலை கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டார். மாநில துணை தலைவர்களாக மனோஜ் கைலாசம், அஷ்வின் சந்தர், ஸ்ரீதர், சாஜதி, சுரேஷ், வெங்கடேசன் ஆகிய 6 பேரும், பொதுச் செயலாளர்களாக வேல்முருகன், பிரபாகரன், பிரவீன், ஜெகதீஷ்வரன், ராஜலெட்சுமி, சுரேந்தர், நவீன் வேணுகோபால், யுவராஜ், காமராஜ், பரத் ஆகிய 10 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும், செயலாளர்களாக ராம்பிரசாத், கிரண்குமார், கோகுல கிருஷ்ணன், கதிரேசன், எடக்குளம் சங்கர், தர்மா ஆகிய 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில செயற்குழு உறுப்பினர்களாக சக்திகுமார், ராஜா, பிரயங்கா, அஜித்குமார் ஆகிய 4 பேரும், மாவட்ட தலைவர்களாக 50 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை