திருவாதிரைக்களி நிகழ்ச்சியில் கொரோனா விதிமீறல்; 500 பெண்கள் மீது வழக்குப்பதிவு: குமரி- கேரள எல்லையில் பரபரப்பு

தினகரன்  தினகரன்
திருவாதிரைக்களி நிகழ்ச்சியில் கொரோனா விதிமீறல்; 500 பெண்கள் மீது வழக்குப்பதிவு: குமரி கேரள எல்லையில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா மற்றும்  ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.  இதையடுத்து இதுவரை நோய் பாதிப்பு எண்ணிக்கை  421 ஆக உயர்ந்துள்ளது. நோய் பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கொரோனா  வழிகாட்டு நிபந்தனைகளை கடுமையாக்கியுள்ளது. இந்நிலையில்  கடந்த 3 நாட்களுக்கு முன்பு குமரி-கேரள எல்லையான பாறசாலையில் சிபிஎம்  கட்சியின் திருவனந்தபுரம் மாவட்ட மாநாடு நடந்தது. இதையொட்டி மாலையில்  அங்குள்ள ஒரு மைதானத்தில் கேரளாவின் பாரம்பரிய நடனமான திருவாதிரைக்களி  நடத்தப்பட்டது. மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட இந்த நடன நிகழச்சியில் 502  பெண்கள் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்த நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட பெண்கள் யாரும் முககவசம் அணியவில்ைல. இதை பார்க்க சிபிஎம்  பொலிட் பீரோ உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஏ.பேபி உள்பட ஏராளமான  தலைவர்களும் வந்திருந்தனர். கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவிவரும் நிலையில்  வழிகாட்டு நெறிமுறைகளை மீறி 500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட  திருவாதிரைக்களி நிகழ்ச்சி கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக  காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதையடுத்து  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 502 பெண்கள் உள்பட 550 பேர் மீது பாறசாலை போலீசார்  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மூலக்கதை