3 கோடி இளைஞர்களுக்கு முதல் கட்ட தடுப்பூசி: சுகாதார அமைச்சர் தகவல்

தினகரன்  தினகரன்
3 கோடி இளைஞர்களுக்கு முதல் கட்ட தடுப்பூசி: சுகாதார அமைச்சர் தகவல்

புதுடெல்லி: இதுவரை நாட்டில் உள்ள 3 கோடி இளைஞர்களுக்கு முதல் கட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: `நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் கடந்த 3ம் தேதி துவங்கப்பட்டது. இதுவரையிலும், சுகாதாரம், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுடையோர்களுக்கு 26,73,385 பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 76 லட்சம் தடுப்பூசி டோஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் எண்ணிக்கை 154.61 கோடியாக உயர்ந்துள்ளது,’ எனக் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது டிவிட்டரில், `இதுவரை, நாட்டில் 3 கோடிக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு முதல் கட்ட கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தகுதியுடைய இளைஞர்கள் விரைந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

மூலக்கதை