ஜடேஜாவின் பொங்கல் ‘அட்வைஸ்’ | ஜனவரி 13, 2022

தினமலர்  தினமலர்
ஜடேஜாவின் பொங்கல் ‘அட்வைஸ்’ | ஜனவரி 13, 2022

புதுடில்லி: ‘‘சிகரெட் போன்ற புகையிலை பொருட்களை பயன்படுத்துவது உடல்நலத்துக்கு கேடு,’’ என, ஜடேஜா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பல்வேறு மொழிகளில் வெளியான புஷ்பா என்ற சினிமா நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொங்கல் தினமான இன்று இப்படம் இந்தியில் வெளியாகிறது. படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் போல, இந்திய கிரிக்கெட் ‘ஆல் ரவுண்டர்’ ஜடேஜா, தாடி மீசையுடன் புகைப்பிடிப்பது போன்ற போட்டோ நேற்று வெளியானது.

நியூசிலாந்து தொடரில் ஏற்பட்ட காயத்தில் இருந்து தற்போது மீண்டும்  வரும் ஜடேஜாவின் இந்த போட்டோவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ‘புஷ்பான்னா ‘பிளவருன்னு’ நினைச்சியா, ‘பயரு’...  என தெரிவித்த ஜடேஜா,‘‘சிகரெட், புகையிலை பயன்படுத்துவது உடல்நலத்துக்கு கேடு, இது கேன்சரை ஏற்படுத்தும். இதை பயன்படுத்தாதீர்கள். இந்த போட்டோ ‘கிராபிக்ஸ்’ மட்டுமே,’’ என்றார்.

மூலக்கதை