உருக்கு ஆலை அமைக்க அதானி-போஸ்கோ ஒப்பந்தம்

தினமலர்  தினமலர்
உருக்கு ஆலை அமைக்க அதானிபோஸ்கோ ஒப்பந்தம்

புதுடில்லி:கவுதம் அதானி தலைமையிலான, 'அதானி குழுமம்' உருக்கு, புதிப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் வணிக வாய்ப்புகளை மேம்படுத்த, தென் கொரியாவைச் சேர்ந்த, 'போஸ்கோ' நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இது குறித்து, அதானி குழுமத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:குஜராத்தில் உள்ள முந்த்ராவில், பசுமையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, ஒருங்கிணைந்த உருக்கு ஆலையை நிறுவுவது மற்றும், பிற வணிகங்களுக்கான வாய்ப்புகளை ஆராய்வது ஆகியவை சம்பந்தமாக, போஸ்கோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குஜராத்தில் ஆலை அமைப்பது மட்டுமின்றி; புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஹைட்ர ஜன், சரக்கு கையாளல் போன்ற பல்வேறு துறைகளிலும், இரு தரப்பும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பை இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தி தந்துள்ளது.இவ்வாறு, அதானி குழுமத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, குஜராத்தில் அதானி குழுமம், விரைவில் உருக்கு ஆலை அமைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

மூலக்கதை