பொருளாதார சேதத்தை ஏற்படுத்துமா ஒமைக்ரான்? நிபுணர்கள் கருத்து

தினமலர்  தினமலர்
பொருளாதார சேதத்தை ஏற்படுத்துமா ஒமைக்ரான்? நிபுணர்கள் கருத்து

வாஷிங்டன்: உலக பொருளாதாரம் கடந்த ஆண்டின் டெல்டா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துக்கொண்டிருக்கும் நிலையில், வேகமாக பரவக் கூடிய ஒமைக்ரான், தொற்று எண்ணிக்கையை உயர்த்துவதால், பொருளாதாரம் மீண்டும் தடுமாற்றத்தைச் சந்திப்பதாக அத்துறை நிபுணர்கள் கருதுகிறார்கள்.

உலக வங்கி செவ்வாயன்று 2022க்கான அதன் கணிப்புகளை குறைத்துள்ளது. ஒமைக்ரான் மற்றும் பிற காரணிகள் ஏற்படுத்தும் பொருளாதார பாதிப்புகளால் இந்தாண்டு வளர்ச்சியானது குறிப்பிடத்தக்க அளவு குறையும் என்கிறது. 2021ல் 5.5 சதவீதத்திற்கு மீண்ட வளர்ச்சியானது, இந்தாண்டு 4.1 சதவீதமாக குறையும், 3.4 சதவீதம் வரை சரியவும் வாய்ப்பு உண்டு என எச்சரிக்கிறது.

அதே போல் ஐ.எம்.எப்., அமைப்பும் தனது வளர்ச்சி கணிப்புகளை குறைக்கக் கூடும் என அதன் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா கோடிட்டு காட்டியுள்ளார். பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடிஸின், தலைமைப் பொருளாதார நிபுணர் மார்க் சாண்டி கூறியதாவது: இந்தாண்டின் முதல் காலாண்டில் அமெரிக்காவின் வளர்ச்சி 2.2 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

இது முந்தைய மதிப்பீடான 5.2 சதவீதத்தை விட பாதியளவு தான். செலவிடுதல் குறைதல், உணவக முன்பதிவுகளில் சரிவு, விமான ரத்துகள், பள்ளிகள் மூடப்பட்டு மீண்டும் ஆன்லைன் கல்விக்கு திரும்புதல் ஆகியவை ஒமைக்ரான் பொருளாதார சேதம் ஏற்படுத்துவதை காட்டுகிறது.


இருப்பினும், ஒமைக்ரான் விரைவாக கடந்து செல்லும். இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி மீண்டும் எழும். ஒவ்வொரு அலையும், முந்தைய அலையைவிட சுகாதார அமைப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு குறைவான சேதத்தையே ஏற்படுத்தும். இவ்வாறு கூறினார்.

வாஷிங்டன்: உலக பொருளாதாரம் கடந்த ஆண்டின் டெல்டா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துக்கொண்டிருக்கும் நிலையில், வேகமாக பரவக் கூடிய ஒமைக்ரான், தொற்று எண்ணிக்கையை உயர்த்துவதால்,

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை