ஐந்து விக்கெட் சாய்த்தார் பும்ரா; இந்திய அணி முன்னிலை

தினமலர்  தினமலர்
ஐந்து விக்கெட் சாய்த்தார் பும்ரா; இந்திய அணி முன்னிலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கேப்டவுன்: கேப்டவுன் டெஸ்டில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 210 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வேகத்தில் மிரட்டிய பும்ரா, 5 விக்கெட் சாய்த்தார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தற்போது தொடர் 1-1 என சம நிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் மூன்றாவது, கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 223 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் முதல் இன்னில்சில் தென் ஆப்ரிக்க அணி 1 விக்கெட்டுக்கு 17 ரன் எடுத்து 206 ரன் பின்தங்கி இருந்தது.

இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. முதல் ஓவரை வீசினார் பும்ரா. இவரது 2வது பந்தில் மார்க்ரம் 8 ரன்னுக்கு போல்டானார். மறுபக்கம் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த 'நைட் வாட்ச்மேன்' மஹராஜை, 25 ரன்னில் போல்டாக்கி அனுப்பி வைத்தார் உமேஷ் யாதவ். துசென் 21 ரன் எடுத்தார்.

ஷமி வீசிய போட்டியின் 56 வது ஓவர் இந்திய ரசிகர்களுக்கு இனிப்பாக அமைந்தது. இதன் முதல் பந்தில் பவுண்டரி அடித்த பவுமாவை 28 ரன்னுக்கு, அடுத்த பந்தில் அவுட்டாக்கினார் ஷமி. அடுத்து வந்த வெர்ரேனை, இரண்டாவது பந்தில் 'டக்' அவுட்டாக்கி, வெறுங்கையுடன் திருப்பி அனுப்பினார்.

மறுபக்கம் ஜான்செனை போல்டாக்கினார் பும்ரா. மீண்டும் அசத்திய இவர், நீண்ட நேரம் தொல்லை கொடுத்த பீட்டர்சனை, 72 ரன்னில் வெளியேற்றினார். தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 210 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பும்ரா இத்தொடரில் இரண்டாவது முறையாக 5 விக்கெட் சாய்த்தார். தவிர முகமது ஷமி 2, உமேஷ் யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

திணறல் துவக்கம்


முதல் இன்னிங்சில் பெற்ற 13 ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. மயங்கர் அகர்வால் 7, ராகுல் 10 ரன்னுக்கு அவுட்டாகினர். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 57 ரன் எடுத்து, 70 ரன் முன்னிலை பெற்றிருந்தது.

கேப்டவுன்: கேப்டவுன் டெஸ்டில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 210 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வேகத்தில் மிரட்டிய பும்ரா, 5 விக்கெட் சாய்த்தார்.தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, உலக

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை