இளம் இந்தியா கலக்கல் வெற்றி * சதம் விளாசினார் ஹர்னுார் | ஜனவரி 12, 2022

தினமலர்  தினமலர்
இளம் இந்தியா கலக்கல் வெற்றி * சதம் விளாசினார் ஹர்னுார் | ஜனவரி 12, 2022

 புரோவிடன்ஸ்: உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் 14வது ஜூனியர் ஒருநாள் உலக கோப்பை (19 வயது) தொடர் முதன் முறையாக விண்டீஸ் மண்ணில் ஜன. 15–பிப். 5ல் நடக்கவுள்ளது. மொத்தம் 16 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன. 

இந்திய அணி ‘பி’ பிரிவில் தென் ஆப்ரிக்கா, உகாண்டா, அயர்லாந்து அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதற்கான முதல் பயிற்சி போட்டியில் விண்டீசை வென்ற இந்தியா, இரண்டாவது பயிற்சியில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் யாஷ் துல், பீல்டிங் தேர்வு செய்தார். 

ஆஸ்திரேலிய அணி கேப்டன் கூப்பர் கன்னோலி 117 ரன் எடுத்தார். காகில் 27, ஸ்னெல் 35, வில்லியம் 25 ரன் எடுத்து கைகொடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 49.2 ஓவரில் 268 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியாவின் ரவிக்குமார் 4, ராஜ்யவர்தன் 3 விக்கெட் சாய்த்தனர்.

ஹர்னுார் அபாரம்

இந்திய அணிக்கு ஆங்கிரிஸ் (27), ஹர்னுார் சிங் ஜோடி துவக்கம் கொடுத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்னுார் சிங் (100) சதம் விளாசினார்.  இவரும், 72 ரன் எடுத்த ரஷீத்தும் ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் திரும்பினர். யாஷ் துல் அரைசதம் அடிக்க, இந்திய அணி 47.3 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 269 ரன் எடுத்து, 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது. யாஷ் துல் (50), தினேஷ் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை