‘டாப்–10’ பட்டியலில் கோஹ்லி, ரோகித்: ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில் | ஜனவரி 12, 2022

தினமலர்  தினமலர்
‘டாப்–10’ பட்டியலில் கோஹ்லி, ரோகித்: ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில் | ஜனவரி 12, 2022

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பேட்டர்களுக்கான ‘டாப்–10’ பட்டியலில் இந்தியாவின் ரோகித் (5வது இடம்), கோஹ்லி (9வது) நீடிக்கின்றனர்.

டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா, 781 புள்ளிகளுடன் 5வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்திய கேப்டன் விராத் கோஹ்லி (740 புள்ளி) 9வது இடத்தில் நீடிக்கிறார்.

சிட்னி டெஸ்டில் அரைசதம் கடந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், 871 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறினார். நியூசிலாந்தின் வில்லியம்சன் (862) 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிரண்டு இடங்களில் ஆஸ்திரேலியாவின் லபுசேன் (924 புள்ளி), இங்கிலாந்தின் ஜோ ரூட் (881) தொடர்கின்றனர். தென் ஆப்ரிக்க கேப்டன் டீன் எல்கர் (731) 10வது இடத்துக்கு முன்னேறினார்.

‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் விண்டீசின் ஜேசன் ஹோல்டர் (382 புள்ளி), இந்தியாவின் அஷ்வின் (356), ரவிந்திர ஜடேஜா (332) முறையே முதல் மூன்று இடங்களை தக்கவைத்துக் கொண்டனர்.

மூலக்கதை