3 நாட்கள் தொடர்ந்து மாடல் அழகி பலாத்காரம்

தினகரன்  தினகரன்
3 நாட்கள் தொடர்ந்து மாடல் அழகி பலாத்காரம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி. இவர் விளம்பரத்திற்கு போட்டோ ஷூட் எடுப்பதற்காக ஆலப்புழாவை சேர்ந்த சலீம்குமார்(33) என்பவரை அணுகியுள்ளார். அவர் கொச்சியில் இடத்திரா பகுதியில் உள்ள லாட்ஜில் வைத்து போட்டோ ஷூட் எடுக்கிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 1ம் தேதி மாடல் அழகியை அழைத்து கொண்டு லாட்ஜிக்கு சென்றார். அங்கு சலீம்குமார் அவருக்கு ஜூசில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். இதை தெரியாமல் குடித்த மாடல் அழகி மயங்கி விட்டார். இதையடுத்து சலீம்குமார் அவரது நண்பர்கள் ஷமீர், அஜ்மல் ஆகியோர் சேர்ந்து அவரை பலாத்காரம் செய்துள்ளனர். தொடர்ந்து 3 நாட்கள் வைத்து சீரழித்துள்ளனர். பின்னர் மாடல் அழகியை விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட அவர் இதுகுறித்து கொச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சலீம்குமாரை கைது செய்தனர். ஷமீர், அஜ்மல் மற்றும் லாட்ஜ் உரிமையாளரான பெண் ஆகியோரை தேடி வருகின்றனர்.

மூலக்கதை