டெல்டா வைரஸை விட ஒமைக்ரானின் தீவிரம் குறைவு; அமெரிக்க அதிபரின் ஆலோசகர்

தினமலர்  தினமலர்
டெல்டா வைரஸை விட ஒமைக்ரானின் தீவிரம் குறைவு; அமெரிக்க அதிபரின் ஆலோசகர்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவினாலும், டெல்டா வைரஸைவிட தீவிரம் குறைந்ததாகவே இருக்கிறது,'' என்று அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் மருத்துவர் அந்தோனி பவுசி தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவில் கோவிட் வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா போன்ற நாடுகள் ஆப்ரிக்காவிலிருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்கும் அளவுக்கு சென்றுவிட்டனர்.


அமெரிக்காவிலும் ஒமைக்ரான் மெல்லப் பரவி தற்போது 3 மாகாணங்களில் பாதிப்பு அதிகரித்துவிட்டது. ஆனால், ஆபத்தான டெஸ்டா வைரஸைவிட, ஒமைக்ரான் வைரஸால் ஏற்படும் பாதிப்பின் தீவிரம் குறைவாகவே இருக்கிறது என்று அமெரிக்க மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் மருத்துவர் அந்தோனி பவுசி கூறியதாவது: ஒமைக்ரான் வைரஸ் குறித்தும், அதன் தீவிரத்தன்மை குறித்தும் முடிவுக்கு வருவதற்கு அதிகமான தகவல்கள் தேவைப்படுகின்றன. ஆனால், முதல்கட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தால் டெல்டா வைரஸின் தீவிரத்தைவிட, ஒமைக்ரான் வைரஸ் தீவிரம் குறைவாகத்தான் இருக்கிறது.


ஆனால், தீவிரம் குறைந்ததா? அல்லது உண்மையிலேயே ஏதேனும் பாதிப்பு ஏற்படுத்துமா?, டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஆபத்து குறைவானதா? அல்லது ஆபத்து மிகுந்ததா? என்பதை மிகுந்த கவனத்துடன் ஆய்வு செய்தே முடிவு செய்ய வேண்டும்.

தற்போது ஆப்ரிக்க மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த தடைகள் நீக்கப்படும். தென் ஆப்ரிக்கா மற்றும் பிற ஆப்ரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை உண்மையில் கடினமான சூழலைத்தான் ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவினாலும், டெல்டா வைரஸைவிட தீவிரம் குறைந்ததாகவே இருக்கிறது,'' என்று அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் மருத்துவர் அந்தோனி பவுசி

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை