அபுதாபி பட்டத்து இளவரசருடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

தினமலர்  தினமலர்
அபுதாபி பட்டத்து இளவரசருடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு


அபுதாபி : அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் சயித் அல் நஹ்யான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயித் ஆகியோரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்துப் பேசினார்.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் தலைநகர் அபுதாபியில், 5வது இந்திய பெருங்கடல் மாநாடு, நேற்று முன்தினமும், நேற்றும் நடந்தது. இதில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.இந்த மாநாட்டிற்கு இடையே அபுதாபி பட்டத்து இளவரசரான முகமது பின் சயித் அல் நஹ்யானை ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.

அந்த சந்திப்பின்போது ஐக்கிய அரபு எமிரேட்சின் பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த வாழ்த்துக்களை, பட்டத்து இளவரசரிடம் ஜெய்சங்கர் பகிர்ந்தார்.இதையடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயித்தை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்ட அமைச்சர் ஜெய்சங்கர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா இடையிலான இருதரப்பு உறவுகள், புதிய உச்சத்தை தொடும் என்ற முழு நம்பிக்கை தனக்கு உள்ளதாக தெரிவித்தார்.

இதற்கிடையே இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, ஓமன் வெளியுறவு அமைச்சர் சயித் பாதர் அல்புசைதி ஆகியோரையும் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.

அபுதாபி : அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் சயித் அல் நஹ்யான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயித் ஆகியோரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை