உலகில் கொரோனாவால் 26.61 கோடி பேர் பாதிப்பு... உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52.70 லட்சத்தை தாண்டியது

தினகரன்  தினகரன்
உலகில் கொரோனாவால் 26.61 கோடி பேர் பாதிப்பு... உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52.70 லட்சத்தை தாண்டியது

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52.70 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனிடையே தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமைக்ரான்’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, பல்வேறு நாடுகளை சேர்ந்த 52,70,527 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 26.61.03,799 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 23,96,86,600 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் 49,961,458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் 140 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் மரணமடைந்தோர் எண்ணிக்கை 808,748 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று தீவிரமடைவதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது.

மூலக்கதை