உக்ரைன் மீது போர் தொடுத்தால் ரஷ்யாவுக்கு பொருளாதார தடை

தினமலர்  தினமலர்
உக்ரைன் மீது போர் தொடுத்தால் ரஷ்யாவுக்கு பொருளாதார தடை

வாஷிங்டன்-தற்போது ஐரோப்பாவில் உள்ள உக்ரைனை கைப்பற்றுவதற்காக போர் தொடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அவ்வாறு போர் தொடுத்தால் கடும் பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன.

தங்கள் எல்லையில் உள்ள உக்ரைனின் கிரீமியா பகுதியை 2014ல் ரஷ்யா கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து ரஷ்யா மீது சில பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது.இந்நிலையில் உக்ரைனை முழுமையாக கைப்பற்றும் நோக்கத்தில் எல்லையில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்களை ரஷ்யா நிறுத்தி வைத்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்தால், ரஷ்யா கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன.

குறிப்பாக, 'ஸ்விப்ட்' எனப்படும் சர்வதேச பணப் பரிமாற்றத்திற்கான செயல்பாடுகளை மேற்கொள்ள ரஷ்யாவுக்கு தடை விதிக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளன.ஏற்கனவே ஈரானுடன் மோதல் ஏற்பட்டபோது இந்த முறையை அமெரிக்கா கையாண்டது. அதனால், ஈரானுக்கு கடும் நிதி சிக்கல் ஏற்பட்டது.

தற்போது அமெரிக்காவுடன் ஐரோப்பிய நாடுகளும் இணைந்து ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அதனால் ரஷ்யா கடும் பாதிப்பை சந்திக்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.இதைத் தவிர ரஷ்யாவுக்கு பல்வேறு வகைகளில் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் அமெரிக்க எடுப்பதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வாஷிங்டன்-தற்போது ஐரோப்பாவில் உள்ள உக்ரைனை கைப்பற்றுவதற்காக போர் தொடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அவ்வாறு போர் தொடுத்தால் கடும் பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை