இந்திய- ரஷ்ய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகிறார். 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு!!

தினகரன்  தினகரன்
இந்திய ரஷ்ய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகிறார். 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு!!

டெல்லி : ஒரு நாள் பயணமாக இன்று பிற்பகலில் டெல்லி வரும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா - ரஷியா உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மாஸ்கோவில் இருந்து டெல்லி வரும் புதின், விமான நிலையத்தில் இருந்து நேராக மாநாடு நடைபெறும் ஐதராபாத் இல்லத்திற்கு செல்கிறார். அங்கு பிரதமர் மோடி அவரை வரவேற்கிறார். அதன்பின்னர் 2 தலைவர்களும் தங்கள் நாட்டு உயர்மட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அதனைத் தொடர்ந்து மோடியும் புதினும் தனியாக சந்தித்து பேசுகின்றனர். உச்சி மாநாட்டின் முடிவில் 2 நாடுகளுக்கு இடையே வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. மோடி, புதின் சந்திப்பிற்கு முன்னதாக 2 நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தையும் நடைபெறுகிறது. அதில் 2 தரப்பு உறவு, மண்டல சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாடு நிறைவடைந்ததும் விளாடிமிர் புதின் நாடு திரும்புகிறார்.

மூலக்கதை