ஜூனியர் ஹாக்கி: அர்ஜென்டினா சாம்பியன்

தினகரன்  தினகரன்
ஜூனியர் ஹாக்கி: அர்ஜென்டினா சாம்பியன்

புவனேஸ்வர்: ஜூனியர் உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரில், அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த பைனலில் ஜெர்மனியுடன் மோதிய அர்ஜென்டினா 4-2 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது. அந்த அணியின் டொமினி ஹாட்ரிக் கோல் ( 10வது, 25வது, 50வது நிமிடம்) போட்டு அசத்தினார். அகோஸ்டினி 60வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டார். ஜெர்மனி சார்பில் ஹேனர் (36’), பான்ட் (47’) கோல் அடித்தனர். முன்னதாக 3வது இடத்துக்கு இந்தியாவுடன் மோதிய பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

மூலக்கதை