ராதே ஷ்யாம் டப்பிங்கை முடித்த பூஜா ஹெக்டே

தினமலர்  தினமலர்
ராதே ஷ்யாம் டப்பிங்கை முடித்த பூஜா ஹெக்டே

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் - பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள படம் ராதே ஷ்யாம். இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் இதுவாகும். ஐரோப்பாவை பின்னணியாக கொண்ட காதல் கதையில் உருவாகியுள்ள இப்படம் ஜனவரி 14ல் திரைக்கு வருகிறது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிரமோசன் பணிகளும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், ராதே ஷ்யாம் படத்தில் தனக்கான டப்பிங்கை பேசி முடித்துள்ளார் பூஜா ஹெக்டே. சமீபகாலமாக தெலுங்கு மொழியை சரளமாக பேசத்தொடங்கியிருப்பதால் தனக்குத்தானே டப்பிங் பேசியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் பூஜா ஹெக்டே.

மூலக்கதை