ஒரு மூட்டை சிமென்ட் விலை 400 ரூபாயாக உயரக்கூடும்

தினமலர்  தினமலர்
ஒரு மூட்டை சிமென்ட் விலை 400 ரூபாயாக உயரக்கூடும்

கோல்கட்டா:சிமென்ட் விலை மீண்டும் அதிகரிக்க கூடும் என்றும், ஒரு மூட்டை சிமென்டின் விலை, இதுவரை இல்லாத வகையில் 400 ரூபாயை எட்டக்கூடும் என்றும் ‘கிரிசில்’ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நடப்பு நிதியாண்டில், சிமென்ட் சில்லரை விற்பனை விலை, மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஒரு மூட்டை சிமென்ட் விலை, இதுவரை இல்லாத வகையில் 400 ரூபாயை எட்டக்கூடும்.நிலக்கரி மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை அதிகரிப்பால், உற்பத்தி விலையும் அதிகரித்து வருகிறது.
சிமென்ட் விற்பனையை பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 20 சதவீதம் அதிகரித்திருந்த நிலையில், இரண்டாவது பாதியில் 11–13 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு ள்ளது. கடந்த அக்டோபரில், நாட்டின் தென் பகுதியில், ஒரு மூட்டைக்கு 54 ரூபாய் விலை அதிகரித்தது.
மத்திய பகுதியில் 20 ரூபாயும்; வட பகுதியில் 12 ரூபாயும் அதிகரித்தது. மேற்கு பகுதியில் 10 ரூபாய் என்ற அளவில் விலை உயர்ந்தது. இருப்பதில் கிழக்கு பகுதியில் தான் 5 ரூபாய் என்ற அளவில் விலை உயர்வு இருந்தது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை