விரைந்து வழங்கணும்... சலுகை! ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு

தினமலர்  தினமலர்
விரைந்து வழங்கணும்... சலுகை! ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு

திருப்பூர்,:ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., திட்டத்தில், நிலுவை தொகைக்கான சான்றுகளை விரைந்து வழங்கவேண்டும் என, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் செலுத்தும் வரியை, மத்திய அரசு, ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., என்கிற திட்டத்தில் திரும்ப வழங்குகிறது. வெளிநாடுகளுக்கு அனுப்பிய ஆடைக்கான தொகை பெறப்பட்டபின், ஏற்றுமதியாளர்கள், சுங்க வரித்துறையில், இச்சலுகைக்காக விண்ணப்பிக்கின்றனர்.

மற்ற சலுகைகள்போன்று அல்லாமல், ஆர்.ஓ. எஸ்.சி.டி.எல்., திட்டத்தில், ஆடை மதிப்பில், 4 முதல் 6 சதவீத தொகைக்கான மாற்றத்தக்க சான்றாக வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி, ஏற்றுமதி நிறுவனங்கள், பொருட்கள் இறக்குமதிக்கான வரியை கழித்துக்கொள்ளலாம். பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு, மத்திய அரசின் இந்த திட்டம், உறுதுணையாக உள்ளது.நடப்பு ஆண்டு, திட்ட சலுகை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் இம்மாதம் வரை, பல கோடி ரூபாய் மதிப்பிலான சலுகை நிலுவையில் உள்ளது.

பின்னலாடை ஏற்று மதியாளர்கள் சிலர் கூறியதாவது:திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறையினருக்கு, கடந்த ஜனவரி முதல் இம்மாதம் வரை, 1,300 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., சலுகை வழங்கப்படாமல், நிலுவையில் உள்ளது. இதுகுறித்து தொடர்ந்து கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது, சான்றுகளை விடுவித்து வருகின்றனர்.
கொரோனாவுக்குப்பின், நிறுவனங்களின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது. நுால் உட்பட அனைத்து மூலப்பொருட்கள், ஜாப்ஒர்க் கட்டணங்களும் உயர்ந்துள்ளன. எனவே, தொழில் நிலைமை கருதி, மத்திய அரசு, ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., உட்பட நிலுவையில் உள்ள அனைத்து சலுகைகளையும் விரைந்து வழங்கி, ஏற்றுமதியாளர்களுக்கு கைகொடுக்கவேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.

திருப்பூர்,:ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., திட்டத்தில், நிலுவை தொகைக்கான சான்றுகளை விரைந்து வழங்கவேண்டும் என, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை