தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரேநாளில் சவரன் ரூ.344 அதிகரித்தது

தினகரன்  தினகரன்
தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரேநாளில் சவரன் ரூ.344 அதிகரித்தது

சென்னை: தங்கம் விலை கடந்த மாதம் தீபாவளி நேரத்தில் கடுமையாக அதிகரித்தது. அதன் பிறகு உயர்வதும், குறைவதுமான போக்கு இருந்து வருகிறது.  கடந்த 1ம் தேதி தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.4,488க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.35,904க்கும் விற்கப்பட்டது. 2ம் தேதி கிராமுக்கு ரூ.21 குறைந்து ஒரு கிராம் ரூ.4,467க்கும், சவரனுக்கு ரூ.168 குறைந்து ஒரு சவரன் ரூ.35,736க்கும் விற்கப்பட்டது. 2 நாளில் சவரனுக்கு ரூ.488 குறைந்தது. இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட முகூர்த்த தினங்கள் அதிக அளவில் உள்ளதால் தங்கம் விலை குறைந்ந்தது, நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 அதிகரித்தது. நேற்று தங்கம் விலை திடீரென அதிரடியாக கிராமுக்கு ரூ.43 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,511க்கும், சவரனுக்கு ரூ.344 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,088க்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.344 அதிகரித்து இருப்பது நகை வாங்குவோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், அடுத்த கட்டமாக தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்படும் என்பது நாளை தெரியவரும்.

மூலக்கதை