முல்லை பெரியாறுக்கு போலீஸ் பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு

தினகரன்  தினகரன்
முல்லை பெரியாறுக்கு போலீஸ் பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணைதொடர்பாக கேரளாவை சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், தமிழக அரசும் வாதாடி வருகிறது. இந்நிலையில், மதுரையை சேர்ந்த ஸ்டாலின் பாஸ்கரன் சார்பாக வழக்கறிஞர் ஜெய்சுகின், உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘அணையின் நீர்மட்டத்தால் அணைக்கு  எந்த பாதிப்பும் இல்லை என்பது பலமுறை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இருந்தும், அணை குறித்து தேவையற்ற அச்சுறுத்தல்கள் வெளியாகின்றன. இதுபோன்ற பொய்களை பரப்புவதன் மூலம் அணைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, முல்லைப் பெரியாறு அணைக்கு ஒன்றிய போலீஸ் படையின் பாதுகாப்பை வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், பிரதான வழக்கில் எங்களையும் மனுதாரராக இணைத்துக் கொள்ள வேண்டும்,’ என கோரப்பட்டுள்ளது.

மூலக்கதை