கன்னட திரையுலகத்தின் பழம்பெரும் நடிகர் சிவராம் காலமானார்: ஆளுநர், முதல்வர் உள்பட தலைவர்கள் இரங்கல்

தினகரன்  தினகரன்
கன்னட திரையுலகத்தின் பழம்பெரும் நடிகர் சிவராம் காலமானார்: ஆளுநர், முதல்வர் உள்பட தலைவர்கள் இரங்கல்

பெங்களூரு: கன்னட திரையுலகின் மூத்த நடிகர் சிவராம் உடல் நல குறைவால்  பெங்களூருவில் நேற்று காலமானார். அவரின் மறைவுக்கு ஆளுநர், முதல்வர்,  திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  கன்னட திரையுலகில் மூத்த  நடிகராக இருந்தவர் சிவராம். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த சாலை விபத்தில் காயமடைந்த அவரை,  மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இதில் குணமாகி கடந்த வாரம்  வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் கடந்த 1ம் தேதி வீட்டில் தவறி  விழுந்த சிவராமுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக  மாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள்  சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு மூளைச்சாவு அடைந்துள்ளதால்,  கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.  இருப்பினும்  டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்ைச அளித்து வந்தும் சிகிச்சை பலனில்லாமல்  நேற்று காலை காலமானார். அவரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு ெகாண்டு  செல்லப்பட்டது. குடும்ப வழக்கப்படி சடங்குகள் செய்தபின், பொதுமக்கள்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பலர் நேரில் வந்து மலரஞ்சலி செலுத்தினர்.  சிவராம்  மறைவுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, சபாநாயகர்  விஷ்வேஸ்வர ஹெக்டே காகேரி, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா,  முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, குமாரசாமி, எஸ்.எம்.கிருஷ்ணா,  ஜெகதீஷ்ஷெட்டர், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், கர்நாடக  திரைப்பட வர்த்தக சபை, கர்நாடக மாநில கன்னட திரைப்பட கலைஞர்கள் சங்கம்  உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை