மதிப்புமிக்க நேரங்கள் வீண் காங்., மீது பிரதமர் தாக்கு

தினமலர்  தினமலர்
மதிப்புமிக்க நேரங்கள் வீண் காங்., மீது பிரதமர் தாக்கு

டேராடூன் :''நாட்டின் மதிப்புமிக்க நேரங்களை மத்தியில் ஏற்கனவே காங்கிரஸ் தலைமையில் இருந்த ஐ.மு., கூட்டணி அரசு வீணடித்துவிட்டது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.இந்நிலையில் இங்கு ௧௮ ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ., அரசு நாட்டில் சாலை இணைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்தது.


ஆனால் அதற்கு பின் 2004ல் பதவியேற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசு சாலைகள் இணைப்பை கிடப்பில் போட்டது. நாட்டின் மதிப்புமிக்க நேரங்கள் ௧௦ ஆண்டுகால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் வீணடிக்கப்பட்டன. மத்தியில் ௨௦௧௪ல் நாங்கள் பொறுப்பேற்ற பின், சாலை இணைப்பு திட்டங்களுக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது. ௧௦ ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஐ.மு., கூட்டணி ஆட்சியில் உள்கட்டமைப்பு பணிகளில் ஊழல்கள் தலைவிரித்தாடின. ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி பணிகளில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

உத்தரகண்ட் வளர்ச்சிக்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் உள்ள மலைகள் நம் கலாசாரத்தின் சின்னங்கள் என்பதுடன், நம் பாதுகாப்பு அரணாகவும் உள்ளன. மலைப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதிகளுடன் வாழ வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது.
அதனால் தான் மலைப்பகுதிகளிலும் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.இவ்வாறு பிரதமர் பேசினார்.

டேராடூன் :''நாட்டின் மதிப்புமிக்க நேரங்களை மத்தியில் ஏற்கனவே காங்கிரஸ் தலைமையில் இருந்த ஐ.மு., கூட்டணி அரசு வீணடித்துவிட்டது,'' என, பிரதமர் நரேந்திர மோடி

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை