10 விக்கெட் சாய்த்தார் அஜாஸ் | டிசம்பர் 04, 2021

தினமலர்  தினமலர்
10 விக்கெட் சாய்த்தார் அஜாஸ் | டிசம்பர் 04, 2021

மும்பை: மும்பை டெஸ்டில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தி சாய்த்தார் அஜாஸ் படேல்

இந்திய வம்சாவளி வீரர் அஜாஸ் படேல் 33, 1988ல் மும்பையில் பிறந்தவர். 6 வயதில் நியூசிலாந்து சென்றார். 2012ல் முதல் தர போட்டிகளில் அறிமுகம் ஆனார். 2018ல் டெஸ்டில் கால்பதித்த இவர், மும்பை டெஸ்டில் இந்திய அணிக்கு எதிராக சுழலில் அசத்தினார். முதல் நாளில் ஒரே ஓவரில் புஜாரா, கோஹ்லியை அவுட்டாக்கிய இவர், முதல் நாளில் 4 விக்கெட் சாய்த்தார்.

இரண்டாவது நாளிலும் மிரட்டிய அஜாஸ் சுழலில் இந்திய வீரர்கள் வரிசையாக அவுட்டாகினர். கடைசியில் சிராஜை அவுட்டாக்கிய அஜாஸ், முதல் இன்னிங்சில் 47.5 ஓவர்கள் பந்து வீசி, 119 ரன்கள் கொடுத்து, 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார். தனது 11வது டெஸ்டில் சாதித்த இவர், ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட் சாய்த்த முதல் நியூசிலாந்து பவுலர் ஆனார். இதற்கு முன் ரிச்சர்டு ஹாட்லீ, டிம் சவுத்தீ 9 விக்கெட் வீழ்த்தியதே அதிகம். 

* டெஸ்ட் அரங்கில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட் சாய்த்த மூன்றாவது பவுலர் என்ற பெருமை பெற்றார் அஜாஸ். இதற்கு முன் இங்கிலாந்தின் ஜிம் லேக்கர் (10 விக்.,/53 ரன், 1956, எதிர்–ஆஸி.,), இந்தியாவின் கும்ளே (10 விக்.,/74 ரன், 1999, எதிர்–பாக்.,) இதுபோல சாதித்தனர். 

* தவிர மும்பையில் பிறந்து இந்திய அணிக்கு எதிராக மும்பையில் விளையாடிய இரண்டாவது வீரர் ஆனார். இதற்கு முன் டக்ளஸ் ஜார்டைன் 1933ல் இங்கிலாந்து அணி கேப்டனாக விளையாடினார்.

மூலக்கதை