பாபர் ஆசம் அரைசதம் | டிசம்பர் 04, 2021

தினமலர்  தினமலர்
பாபர் ஆசம் அரைசதம் | டிசம்பர் 04, 2021

தாகா: வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் அரைசதம் கடந்தார்.

வங்கதேசம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வென்றது. தாகாவில் இரண்டாவது டெஸ்ட் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷபிக், அபித் அலி ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 59 ரன் சேர்த்த போது தைஜுல் இஸ்லாம் பந்தில் அப்துல்லா ஷபிக் (25) போல்டானார். தொடர்ந்து அசத்திய தைஜுல் ‘சுழலில்’ அபித் அலி (39) போல்டானார். பின் இணைந்த அசார் அலி, கேப்டன் பாபர் ஆசம் ஜோடி வங்கதேச பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. பொறுப்பாக ஆடிய பாபர் ஆசம் அரைசதம் கடந்தார்.

முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுக்கு 161 ரன் எடுத்திருந்த போது மழை, போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. அசார் அலி (36), பாபர் ஆசம் (60) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் சார்பில் தைஜுல் 2 விக்கெட் வீழ்த்தினார்.

மூலக்கதை