என்.சி.ஏ., தலைவர் லட்சுமண் | டிசம்பர் 04, 2021

கோல்கட்டா: தேசிய கிரிக்கெட் அகாடமியின் புதிய தலைவராக லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூருவில், தேசிய கிரிக்கெட் அகாடமி (என்.சி.ஏ.,) உள்ளது. இதன் தலைவராக இருந்த ராகுல் டிராவிட், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து என்.சி.ஏ.,யின் புதிய தலைவராக முன்னாள் வீரர்களான லட்சுமண் அல்லது அனில் கும்ளே நியமிக்கப்படலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில் கோல்கட்டாவில் நடந்த பி.சி.சி.ஐ., ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் என்.சி.ஏ., புதிய தலைவராக லட்சுமண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், வரும் டிச. 13ல் பெங்களூருவில் பொறுப்பேற்க உள்ளார். தவிர இவர், வெஸ்ட் இண்டீசில் நடக்கவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியினருடன் செல்ல உள்ளார்.
என்.சி.ஏ., பவுலிங் பயிற்சியாளராக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு பவுலிங் பயிற்சியாளராக இருந்த டிராய் கூலி நியமிக்கப்பட்டுள்ளார்.
மூலக்கதை
