மருத்துவமனையிலிருந்து நேராக 'பிக் பாஸ்' படப்பிடிப்புக்குச் சென்ற கமல்ஹாசன்

தமிழ் சினிமாவின் சீனியர் கதாநாயகனாக கமல்ஹாசன் இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி நேராக பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் சென்னை, பூந்தமல்லி இவிபி ஸ்டுடியோஸ் சென்றார். இன்று ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பை ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள்.
நிகழ்ச்சியின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவி வருகிறது. அதோடு இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ வீடியோவும் வெளியாகி உள்ளது. அதில், ‛‛உங்கள் அன்பினால் மட்டுமே மீண்ட நான்... இன்று உங்ளுடன் மீண்டும் நான்... இனி என்றுமே உங்கள் நான்'' என தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கமல்ஹாசன் இல்லாததால் ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இந்த வாரமும் ரம்யாதான் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த வார ரம்யாவின் நிகழ்ச்சி ரசிகர்களுக்குப் பெரிய திருப்தியளிக்கவில்லை எனத் தெரிகிறது. எனவே தான் கமல்ஹாசனே இந்த வார நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க முன் வந்தார் என்று சொல்கிறார்கள். இன்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் நலம் குறித்து பிக் பாஸ் போட்டியாளர்கள் விசாரிப்பது நெகிழ்ச்சியாக இருக்கும் என்பது உறுதி.
மூலக்கதை
