போபால் விஷவாயு விபத்து வெப் தொடராகிறது : மாதவன் நடிக்கிறார்

தினமலர்  தினமலர்
போபால் விஷவாயு விபத்து வெப் தொடராகிறது : மாதவன் நடிக்கிறார்

மாதவன் நடித்த பிரீத் வெப் சீரிஸ் பெரிய வெற்றி பெற்றது. இதன் 2வது சீசனில் மாதவனுக்கு பதில் அபிஷேக் பச்சன் நடித்தார். அது அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு மாதவன் டிகப்ளட் என்ற தொடரில் நடித்தார். இப்போது மாதவன் நடிக்கும் புதிய வெப் தொடர் தி ரெயில்வே மேன்.

1984ல் டிச.,2ல் நிகழ்ந்த போபால் விஷவாயு சம்பவத்தை மையமாக வைத்து இந்த வெப் தொடர் உருவாகிறது. இதில் மாதவன், கே.கே.மேனன், பாபில் கான் உள்பட பலர் நடிக்கிறார்கள். யஷ் சோப்ராவின் யஷ்ராஜ் பிலிம்ஸ் இந்த வெப்சீரிஸை தயாரிக்கிறது. 9 எபிசோட்களை கொண்ட தொடராக பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. அடுத்த ஆண்டு டிசம்பரில் இது வெளியாக உள்ளது.

மூலக்கதை