வான்கடேவில் சதம் அடித்தது அற்புதமான உணர்வு; மயங்க் அகர்வால் நெகிழ்ச்சி

மும்பை: இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 2வது டெஸ்ட் மும்பையில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் நாள் முடிவில் 4விக்கெட் இழப்பிற்கு 221 ரன் எடுத்திருந்தது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் ஆட்டம் இழக்காமல் 120 ரன் விளாசினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவருக்கு 4வது சதமாகும். நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் அவர் கூறியதாவது: இந்த டெஸ்ட்டில்எங்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தபோது ராகுல் டிராவிட் என்னிடம் வந்து உங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. நீங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். அதைத்தான் நாங்கள் உங்களிடம் கேட்கிறோம். களத்தில் செட் ஆனதும் அதை பெரிய ஸ்கோர் ஆக்குங்கள் என்றார். அதன்படி நான் சதம் விளாசியதால் மகிழ்ச்சியடைகிறேன். அஜாஸ் பட்டேல் சிறப்பாக பந்துவீசினார். அவர் அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார். ஆனால் நான் அவரின் பந்துவீச்சை அடித்து ஆடும் திட்டத்தில் செயல்பட்டேன். வான்கடே மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தது ஒரு அற்புதமான உணர்வு, என்றார்.
மூலக்கதை
