லக்னோ அணி தலைமை பயிற்சியாளர் யார்?

தினகரன்  தினகரன்
லக்னோ அணி தலைமை பயிற்சியாளர் யார்?

ஐபிஎல் தொடரில் புதிதாக லக்னோ அணி இணைந்துள்ளது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை பிடிக்க ஜிம்பாப்வே முன்னாள் வீரர் ஆண்டிபிளவர், நியூசிலாந்து மாஜி கேப்டன் டேனியல் வெட்டோரி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. கிங்ஸ் பஞ்சாப் அணியின் உதவி பயிற்சியாளராக இருந்த ஆண்டிபிளவர் அந்த பதவியை துறந்து லக்னோ அணியில் இணைய உள்ளார். இதேபோல் பஞ்சாப் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இருவரும் பஞ்சாப் அணியில் இருந்ததால் புரிதல் இருக்கிறது. இதனால் அவருக்கு அதிக வாய்ப்பு உள்ளது. பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளராக 2014-18 ம் ஆண்டு வரை பணியாற்றிய வெட்டோரியும் லக்னோ அணியின் பயிற்சியாளர் வாய்ப்பில் முன்னணியில் உள்ளார்.

மூலக்கதை