தென்ஆப்ரிக்க தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகிறார் ரோகித்சர்மா; ரகானேவுக்கு கல்தா

தினகரன்  தினகரன்
தென்ஆப்ரிக்க தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகிறார் ரோகித்சர்மா; ரகானேவுக்கு கல்தா

மும்பை: நியூசிலாந்துக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் முடிந்த கையோடு இந்திய அணி தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அந்தஅணிக்கு எதிராக 3டெஸ்ட, 3 ஒன்டே மற்றும் 4 டி.20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதனிடையே தற்போது தென்ஆப்ரிக்காவில் ஒமிக்ரான் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் இந்திய அணி திட்டமிட்டபடி வரும் 9ம்தேதி புறப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது. மத்திய அரசின் அனுமதியை பிசிசிஐ எதிர்பார்த்துள்ளது. இதனிடையே தென்ஆப்ரிக்க சுற்றுப்பயணம் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்திய அணி 2 வாரம் தாமதமாக தென்ஆப்ரிக்கா புறப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தென்ஆப்ரிக்க தொடர் தொடர்பாக கொல்கத்தாவில் இன்று நடைபெறும் பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது. இதனிடையே இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவி ரகானேவிடம் இருந்து பறிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ரகானே கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக மோசமான பார்மில் உள்ளார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் அவர் ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை.  இந்நிலையில் தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பதும் சந்தேகம் தான். இதனால் இந்திய டெஸ்ட் அணிக்கு அவருக்கு பதிலாக ரோகித்சர்மா துணை கேப்டனாக நியமிக்கப்பட உள்ளார். தென்ஆப்ரிக்க தொடருக்கான அணி தேர்வின் போது இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை