இம்ரான்கானுக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்து

தினமலர்  தினமலர்

இஸ்லாமாபாத்:செர்பியாவில் உள்ள பாக். துாதரகத்தின் சமூக வலைதள கணக்கில் விஷமிகள் புகுந்து அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு செர்பியா. இங்குள்ள பாக். துாதரகத்தின் சமூக வலைதள கணக்கில் திடீரென பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான கருத்துகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தானில் இதுவரை இல்லாத வகையில் பணவீக்கம் உச்சத்திற்கு சென்றுள்ளது. அரசு அதிகாரிகளாகிய நாங்கள் எவ்வளவு நாட்கள் தான் வாய்மூடி மவுனமாக பணியாற்றிக் கொண்டிருப்பது.மூன்று மாதங்களாக எங்களுக்கு ஊதியம் தரவில்லை. பள்ளிக் கட்டணம் கட்ட முடியாததால் எங்கள் குழந்தைகளை வகுப்பறையில் உட்கார விடாமல் வெளியே அனுப்புகின்றனர்.
இதுவா உங்கள் புதிய பாக்.? எங்களை மன்னியுங்கள் இம்ரான். இதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த தகவலுடன் இம்ரான் கான் அடிக்கடி பயன்படுத்தும் 'நாம் கவலையே படக்கூடாது' என்ற வார்த்தையை கிண்டல் செய்யும் பாட்டும் இணைக்கப்பட்டிருந்தது.சமூக ஊடகங்களில் இந்த செய்தி வேகமாக பரவியதும் பாக். அரசு உடனடியாக அதை நீக்கியது.
கணினி விஷமிகள் சிலர் செர்பியாவில் உள்ள பாக். துாதரக சமூக வலைதள கணக்கில் ஊடுருவி அவதுாறு செய்தி பரப்பி இருப்பதாகவும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் பாக். அரசு கூறியுள்ளது.

இஸ்லாமாபாத்:செர்பியாவில் உள்ள பாக். துாதரகத்தின் சமூக வலைதள கணக்கில் விஷமிகள் புகுந்து அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டதால் பரபரப்பு

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை