கனடாவில் 15 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதி..!

தினகரன்  தினகரன்
கனடாவில் 15 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதி..!

ஒட்டாவா : கனடாவில் 15பேருக்கு புதிய வகை கொரோனா தொற்றான ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கனடா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கனடா முழுவதும் கடுமையான நோய் தொற்று மீண்டும் உயரத் தொடங்கும் என்று பொது சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.கனடா தேசிய ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை ஏற்று 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆறு மாதங்களுக்குள் தடுப்பூசி தொடரை முடித்து  பிறகு பூஸ்டர் ஷாட் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அமெரிக்காவைத் தவிர அனைத்து நாடுகளிலிருந்தும் விமானம் மூலம் வரும் மக்கள் கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது, தென்னாப்பிரிக்காவிலிருந்து 10 நாடுகளை உள்ளடக்கும் வகையில் பயணிகளுக்கான தடையை விரிவுபடுத்தியது. டொராண்டோவில்  நேற்று ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று  மூன்று பேருக்கு உறுதியானது. அவர்களில் இருவர் சமீபத்தில் நைஜீரியாவிலிருந்து திரும்பினர், மற்றொருவர் சுவிட்சர்லாந்தில் இருந்து திரும்பியவர்.தற்போது கடுமையான கொரோனா தொற்று பாதிப்பு இல்லையென்றாலும்  வரும் வாரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துளள்னர். கோவிட்-19 சிகிச்சைக்காக பைசர் நிறுவனத்தின் ஒரு மில்லியன் டோஸ் வாய்வழி வைரஸ் தடுப்பு மருந்தை வாங்க  கனடா ஒப்பந்தம் செய்துள்ளது, மேலும் மெர்க் நிறுவனத்துடன்  500,000 டோஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

மூலக்கதை