பாகிஸ்தானில் இலங்கை அதிகாரி உயிரோடு தீ வைத்து எரிப்பு

தினமலர்  தினமலர்

லாகூர்:பாகிஸ்தானில் இலங்கை அதிகாரி ஒருவரை மதவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் உயிரோடு தீ வைத்து எரித்தனர்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சியல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில், இலங்கையைச் சேர்ந்த பிரியந்தா குமாரா, 40, பொது மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது அலுவலக சுவர் அருகே தெஹ்ரீக் - இ - லபைக் என்ற அமைப்பின் மதப் பிரசார போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதை பிரியந்தா குமாரா கிழித்து குப்பை தொட்டியில் போட்டுள்ளார்.

இதைப் பார்த்த தொழிற்சாலை ஊழியர்கள் அந்த அமைப்பினரிடம் தெரிவித்துள்ளனர். உடனே அந்த அமைப்பைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் தொழிற்சாலையை முற்றுகையிட்டதுடன், பிரியந்தாவை வெளியே இழுத்து வந்து கண்மூடித்தனமாக தாக்கி, உயிரோடு தீ வைத்து எரித்தனர். அலறித் துடித்த பிரியந்தா சில நிமிடங்களில் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை படம் பிடித்த சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதையடுத்து பஞ்சாப் மாகாண முதல்வர் உஸ்மான் பஸ்தார், நடந்த சம்பவம் குறித்து 24 மணி நேரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி தலைமை போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். சமீபகாலமாக பாக்.,கில் ஹிந்து, சீக்கியர், கிறிஸ்துவர் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக உலக நாடுகள் தெரிவித்துள்ளன.

லாகூர்:பாகிஸ்தானில் இலங்கை அதிகாரி ஒருவரை மதவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் உயிரோடு தீ வைத்து எரித்தனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சியல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை