கோப்பை வென்றது இலங்கை: விண்டீஸ் மீண்டும் தோல்வி | டிசம்பர் 03, 2021

தினமலர்  தினமலர்
கோப்பை வென்றது இலங்கை: விண்டீஸ் மீண்டும் தோல்வி | டிசம்பர் 03, 2021

காலே: விண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 164 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, 2–0 என தொடரை முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.

இலங்கை சென்ற விண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இலங்கை வென்றது. இரண்டாவது டெஸ்ட் காலேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 204, விண்டீஸ் 253 ரன் எடுத்தன. நான்காம் நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 328 ரன் எடுத்திருந்தது.

 

ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணிக்கு லசித் எம்புல்டெனியா (39) ஆறுதல் தந்தார். இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 345 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. தனஞ்செயா டி சில்வா (155) அவுட்டாகாமல் இருந்தார்.

 

கடின இலக்கு: பின், 297 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய விண்டீஸ் அணி, இலங்கை ‘சுழலில்’ சிக்கியது. ஜெர்மைன் பிளாக்வுட் (36), போனர் (44) ஆறுதல் தந்தனர். கேப்டன் கிரெய்க் பிராத்வைட் (6), ஷாய் ஹோப் (16), ராஸ்டன் சேஸ் (0), கைல் மேயர்ஸ் (0), வீராச்சாமி பெருமாள் (1), ஜேசன் ஹோல்டர் (3), கீமர் ரோச் (13), ஜோமல் வாரிக்கன் (3) சொற்ப ரன்னில் அவுட்டாகினர்.

 

இரண்டாவது இன்னிங்சில் விண்டீஸ் அணி 132 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இலங்கை சார்பில் எம்புல்டெனியா, ரமேஷ் மெண்டிஸ் தலா 5 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை தனஞ்செயா டி சில்வா, தொடர் நாயகன் விருதை ரமேஷ் மெண்டிஸ் வென்றனர்.

மூலக்கதை