நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக இஷாந்த் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ரஹானே நீக்கம்: பிசிசிஐ

தினகரன்  தினகரன்
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக இஷாந்த் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ரஹானே நீக்கம்: பிசிசிஐ

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக இஷாந்த் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ரஹானே ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இடது சுண்டு விரலில் காயம் ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது காயத்தின் தன்மை குறித்து பிசிசிஐ மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது முழங்கையில் காயம் ஏற்பட்டது. ஸ்கேன் பரிசோதனைக்கு பின், அவரது முன்கையில் வீக்கம் இருப்பது தெரியவந்தது. இதனால் அவருக்கு ஓய்வளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில் பீல்டிங் செய்யும்போது ரஹானேவுக்கு சிறிய தொடை தசைப்பிடிப்பு ஏற்பட்டது. ரஹானே முழுமையாக குணமடையாததால், மும்பையில் நடக்கும் 2வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். ரஹானே உடல்நிலை முன்னேற்றத்தை பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணித்து வருவதாக செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

மூலக்கதை